வட மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்.இவர் வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றியை தொடர்ந்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே ஆட்சிக்கு யார் வந்துள்ளார்கள் என்பதை பார்க்காமல் இவ்வதிகாரங்கள் வழங்கப்பட்டே ஆக வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
“ வடக்கு மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆணை வழங்கி உள்ளார்கள் எனவே. வட மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டே ஆக வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம். இல்லாவிட்டால் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளை தமிழ் கூட்டமைப்பால் செய்ய முடியாமல் போய் விடும். வடக்கு மக்களால் சுமத்தப்பட்டு உள்ள கடமைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பால் நிறைவேற்ற முடிகின்றதா? என்பதை நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.
கிழக்கு பல்லின மக்கள் வாழ்கின்ற மாகாணம். எனவே வடக்கில் அபார வெற்றி கண்டது போல கிழக்கில் வெற்றி அடைய தமிழ் கூட்டமைப்பால் முடியாது. என்றார் அவர்!