அனுராதபுரம் -− ஓமந்தை ரயில் பாதை புனரமைப்பு பணிகளுக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி முதல் ஆறு மாத காலத்துக்கு அப்பகுதி மூடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நிதியுதவியுடன் மேற்படி ரயில் பாதை புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாகவும் மார்ச் 05 ஆம் திகதிக்குப் பின்னர் வடக்குக்கான ரயில் சேவை கொழும்பிலிருந்து அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்படுமென்றும், பயணிகளின் நலனைக் கருத்திற்கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி வரை விசேட ரயில் சேவை நடைபெறுமென்றும் அவர் தெரிவித்தார்.
இக்காலத்தில் அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை விசேட பஸ் சேவைகள் நடைமுறைப்படுத்தப்படுமென்றும் அந்த பஸ் சேவை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 1.5 பில்லியன் செலவில் மஹவ தொடக்கம் ஓமந்தை வரையிலான ரயில் பாதை புனரமைக்கப்படும் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
வடக்குக்கான ரயில்சேவை கொழும்பிலிருந்து அநுராதபுரம் வரை நடைமுறையிலிருக்குமென்றும் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி வரை மற்றுமொரு ரயில் சேவை நடைமுறைப்படுத்தப்படும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.