வடக்குக்கான தபால் ரயில் மூலம் ரூ.17,000,000 வருமானம்

வடக்குக்கான தபால் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தில் ஒரு கோடியே 70 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்று யாழ். புகையிரத நிலைய பொறுப்பதிகாரி டி.பிரதீபன் தெரிவித்தார்.

mail train

கடந்த மாதம் 14ஆம் திகதி முதல் வடக்குக்கான இரவு நேர தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
தெற்கிலிருந்து வடக்குக்கு 21 ஆயிரம் பயணிகளும் வடக்கிலிருந்து தெற்குக்கு 28 ஆயிரம் பயணிகளும் முதல் மாதத்தில் பயணித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

வடக்கு ரயில் சேவைக்கான சாதாரண கட்டனம் 320 ரூபாயாகும். யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்கள், ரயில் சேவை மூலம் கொழும்புக்கு கொண்டுசெல்லப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

Related Posts