Ad Widget

வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் – முதலமைச்சர்

வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

vicky

இன்று காலை இடம்பெற்ற மாகாண கைத்தொழில் கண்காட்சி நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

இன்றைய காலகட்டத்தில் கைத்தொழில் யாவும் கையினால் வனையப்படும் அல்லதுசெய்யப்படும் பொருள் சம்பந்தமான தொழில் என்று கூறுவதற்கில்லை.வடகிழக்கு மாகாண மக்களுக்கு கைத்தொழிலின் பரீட்சயத்தை ஏற்படுத்த வேண்டும். மக்கள் தங்கள் கால்களில் நின்று சுயமாக பொருளாதார ரீதியாக இயங்க வேண்டும். என்ற எண்ணங்களில் திளைத்தவனாக இருந்தேன் என அவர் தெரிவித்தார்.

இன்று எமது கைத்தொழில்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.அவற்றின் தரங்களை உயர்த்த நாம் வழிவகுக்க வேண்டும். காட்சிப்படுத்துவோருக்குப் பரிசில்கள் வழங்குவது ஊக்குவிப்பை அதிகரிக்கும்.மேலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கைத்தொழில்களை மேம்படுத்துவது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.ஏனென்றால் வடமாகாணம்,அதுவும் யாழ்.குடாநாடு பாரிய கைத்தொழிற் பேட்டைகளை உருவாக்கக்கூடிய சூழலைக் கொண்டதல்ல. எனவே எங்கள் மக்களின் மேம்பாட்டுக்காக அவர்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாங்கள் குடிசைக் கைத்தொழில்களில் கூடிய கவனம் செலுத்துவதே நல்லது.

ஆகவே எமது கைத்தொழில்களை வளர்ப்பது அவசியம் என்பதில் எமக்கு எந்தவித மயக்கமும் இல்லை என்று கூறும் அதேவேளை எமது சுற்றுச் சூழல் பாரம்பரியம்,விழுமியங்கள் ஆகியவற்றை அனுசரித்தே எமது கைத்தொழில்கள் உருவாக வேண்டும்.

மேலும் மேலும் எங்கள் கைத்தொழில் கைவண்ணங்கள் கருத்தை ஈர்க்கும் வண்ணம் மேம்பட்டு முதனிலை அடைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts