வடக்கு,கிழக்கில் தமிழ் அடையாளங்களை அழிக்கும் அரசு-முதலமைச்சர்

வடக்கு,கிழக்கு மாகாணங்களானவை எமது தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய இடங்கள். ஆனால் தற்போது அவற்றின் தொடர்புகளைக் கொச்சைப்படுத்த, அரசாங்கத்தினால் பலவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் வடகிழக்கு மாகாணங்களில் இராணுவ உதவியுடனே வெளியார் குடியேற்றங்களும் இடம்பெறுகின்றது என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

thollpuram

இன்று காலை 10மணியளவில் தொல்புரம் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலைய திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் இன்று எமது புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தாம் பிறந்த, தமது முன்னோர் பிறந்த தமிழ் மண்ணை மறவாது உதவ முன்வந்துள்ளமை பாராட்டத்தக்க ஒரு விடயம். பல அடிப்படை விடயங்களை இத்தருணத்தில் பேசினால் என்ன என்று எனக்குப் படுகிறது.

கலவரங்களும் காலத்தின் கோலமும் எங்கள் மக்களைப் புலம்பெயர வைத்தது என்னவோ உண்மைதான். எம்மை நாம் பிறந்த பூமியில் வாழ விடவில்லை எம்மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.என்று மனம் வெதும்பித்தான் பிறநாடுகள் சென்றார்கள் எம்மவர்கள்.

மேலும் வடக்கும் கிழக்கும் சேரும் இடங்களைத் தொடர் தமிழ்ப் பிரதேசம் என்று அடையாளம் காட்டாதவாறு சிங்களக் குடியேற்றங்கள் மிக உக்கிரமாக நடைபெற்று வருகின்றன. அத்தோடு எமது பாரம்பரிய நிலங்கள் பறிபோகின்றன.வடகிழக்கு என்பது தமிழர் தாயகம் என்ற அந்தக் கருத்திற்கு மாறான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன.என்பதை உங்கள் எல்லோர் மனங்களிலும் பதிய வைக்க விரும்புகின்றேன்.

பல காணிகளை வடமாகாணத்தினுள்,அதுவும் யாழ் குடா நாட்டினுள், இராணுவம் ஆக்கிரமித்து அவற்றைச் சட்டப்படி கையேற்க நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கின்றது.இப்பொழுது சமாதானம், அமைதி என்று சூழல் மாறுபடத் தொடங்கியதும் அவர்கள் தமது உறவுகளுக்கும் தாம் பிறந்த மண்ணிற்கும் என்ன செய்ய முடியும் என்று எண்ணத் தொடங்கியிருப்பது அவர்களின் தாய்நாட்டுப் பற்றை எடுத்துக் காட்டுகிறது.

மேலும் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் மிக இனப் படுகொலைக்கொப்பான நுண்ணிய நடவடிக்கைகள் புரிவதாகத் தெரியவில்லை. எமக்கு இன்று தடையின்றிக் இங்கு நடப்பதைத் தான் நான் கூறி வைக்கின்றேன். எமது மக்களின் ஒற்றுமைப்பாடும் ஒருமித்த சிந்தனையும் கூட்டுறவும் ஒத்துழைப்புமே எமக்கு வருங்காலத்தில் வளம் கொடுக்கும் வாழ்வைத் தருவன. இந்தக் கூட்டுறவுக்கு அடிகோலும் விதத்திலேயே திரு.இராஜபட்சம் ஸ்ரீரங்கபட்சம் அவர்கள் நடந்து கொண்டிருக்கின்றார். அவரைப் போல சுற்றுச் சூழலை, பிரதேசத்தை, கட்டமைப்புக்களைக் கட்டித் தந்து உதவ பலர் முன்வரவேண்டும்.

மேலும் அவர் தந்த இந்தக் கொடை எம்மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தட்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

தொல்புரத்தில் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலைய திறப்பு

Related Posts