வடக்கு,கிழக்கில் சேவையாற்ற இந்திய வைத்தியர், ஆசிரியர்களை அனுப்பவும் – சிவாஜிலிங்கம்

sivajilingam_tna_mpஇலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றுவதற்காக தமிழ் பேசும் வைத்தியர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுப்பி வைக்குமாறு, வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையை நீக்க இந்தியாவில் இருந்து தமிழ் பேசும் மருத்துவர்களை 2 ஆண்டுகள் சேவை செய்ய அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் தனது வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்கள் பற்றாக்குறையை நீக்குவதற்காகவும் இந்தியாவில் தமிழ் பேசும் ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களையும் 2 ஆண்டுகள் சேவை செய்ய அனுப்பி வைக்க வேண்டுகிறோம் என சிவாஜிலிங்கம் கோரியுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்திய வைத்தியர்களும் ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களும் சேவையாற்றுவதற்கான உரிய நடவடிக்கைகளையும் அனுமதிகளையும் வழங்க ஏற்பாடுகள் செய்யுமாறு இந்திய அரசையும், தமிழக அரசையும், இலங்கை அரசையும் வடக்கு மாகாண சபை கேட்டுக்கொள்கிறது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts