வடக்கில் 6000 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் அமைச்சரவைப் பத்திரம் தயார்!

வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள 6000 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

23/2 நிலையியற் கட்டளையின் கீழ் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு நேற்று பதிலளிக்கும்போதே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் படையினர் வசமிருந்த பொது மக்களின் காணிகளை உரிமையாளர்களிடம் மீளக் கையளிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் ஒரு அங்கமாக வடக்கில் மேலும் 6000 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்றை மீள்குடியேற்ற அமைச்சர் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

2009ஆம் ஆண்டின் பின்னர் வடக்கு கிழக்கில் 47 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப் பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புக்கு அவசியமில்லாத பொது மக்களின் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைளை மேலும் காலதாமதப்படுத் தாமல் முன்னெடுக்க அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.

Related Posts