வடக்கில் 2,000 பேரை பொலிஸ் சேவையில் இணைக்க ஜனாதிபதி பணிப்பு

வடக்கு மாகாணத்தில் 2 ஆயிரம் பேரை பொலிஸ் சேவைக்குள் இணைக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து பொலிஸ் சேவைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

200 பேர் உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கும் ஆயிரத்து 400 பேர் பொலிஸ் கொஸ்தாபல் பதவிக்கும் 400 பெண்கள், பெண் பொலிஸ் கொஸ்தாபல் பதவிக்கும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

Related Posts