வடக்கில் சுமார் 30 ஆயிரம் மீட்டர் வரை கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியுள்ளதாக மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் இந்து சமய கலாசார அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய வாய் மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கண்ணிவெடிகள் அனைத்தும் எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் முழுமையாக அகற்றப்படும் எனவும், அதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுத்துச் செல்லப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, வடக்கு வீட்டுத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் சுவாமிநாதன், “வடக்கின் வீடமைப்புத்திட்டத்தை முன்னெடுக்கும் நகர்வுகள் இப்போது எனது கையில் இல்லை. வடக்குக்கான வீடுகளை அமைக்கும் திட்டம் பிரதமர் கையிலேயே உள்ளது“ என தெரிவித்துள்ளார்.