“வடக்கில் விகாரை அமைத்தாலோ, தெற்கில் கோவில் அமைத்தாலோ யாருக்கும் கேட்க உரிமையில்லை”: சஜித் பிரேமதாஸ

வடக்கில் விகாரைகளை அமைத்தாலும் சரி தெற்கில் கோவில்களை அமைத்தாலும் சரி அதனை தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் விகாரைகளை அமைக்கக் கூடாது, தெற்கில் இந்து ஆலயங்களை அமைக்கக்கூடாது என சிலர் சிந்திக்கின்றனர். இவ்வாறானவர்கள் எமக்கிடையில் இன,மத வேறுபாட்டை உருவாக்குவதனூடாக அவர்கள் சுகபோகங்களை அனுபவிக்கின்றார்கள்.

வடக்கில் விகாரைகளை அமைத்தாலும் சரி தெற்கில் இந்து ஆலயங்களை அமைத்தாலும் சரி அதனை தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.

நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள். ஒற்றுமையின் மூலமாக இந்த நாட்டினை கட்டியெழுப்ப முடியும். எனவே பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்றார்.

Related Posts