வடக்கில் முதலீட்டாளர் மாநாடு : புலம்பெயர் சமூகத்துடன் கலந்துரையாடல்!

சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் வடக்கில் முதலீட்டாளர் மாநாடொன்றை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அது தொடர்பாக புலம்பெயர் சமூகத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நல்லூர் உற்சவத்தின்போது வடக்கிற்குப் பயணம் செய்யும் புலம்பெயர் சமூகத்துடன் இது குறித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் அத்துடன், யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளக்கூடிய முதலீடுகள் தொடர்பாக தெளிவுபடுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களிடம் உப்பளம், திக்கம் வடிசாலை மற்றும் சோலார் பவர் உள்ளிட்ட தொழிற்சாலைகளை வழிநடாத்திச் செல்வதற்கு கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் வடக்கில் நட்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகளை வினைத்திறனுடன் மாற்றி அதிக இலாபத்தை ஈட்டும் வகையில் முன்னோக்கிக் கொண்டுசெல்வதே தமது நோக்கமெனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts