மூன்று மாகாண சபைத் தேர்தலிலும் முதலமைச்சர் வேட்பாளர் யாரொன்று அறிவிக்கப் போவதில்லையென ஆளும் கட்சி முடிவு செய்துள்ளது.
வடக்கு, மத்திய, வடமேல் மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் எவரையும் அறிவிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குழுத் தலைவர்கள் அறிவிக்கப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும் அமைச்சருமான சுசில் பிறேம் ஜெயந்த் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபைத் தேர்தல் முடிந்து பின்னரே ஆளும் கட்சியின் முதலமைச்சர் யார் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
மாவட்ட அடிப்படையில் தலைமை வேட்பாளர் யார் என்பதை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்னமும் முடிவு செய்யவில்லை.
வேட்பாளர் பட்டியல் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் அதுகுறித்துத் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.