வடக்கில் மாவீரர் தினம் மிகவும் அமைதியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டதாகவும் சட்டத்தை மீறியமைக்காக எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
நல்லூர் கோவிலில் உயிரிழந்த தமது உறவுகளுக்காக சிலர் விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இது அவர்களின் தனிப்பட்ட விடயமாதலால் பொலிஸார் இதில் தலையிடவில்லை.
மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கில் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. என்ற போதும் எல். ரீ. ரீ. ஈ. அமைப்பினை முன்னிலைப்படுத்தி எவ்வித ஆர்ப்பாட்டங்களோ ஊர்வலங்களோ நிகழ்ச்சிகளோ பிரசித்தமான முறையில் முன்னெடுக்கப்படாமையில் பதற்றமான சூழ்நிலை காணப்படாததுடன் எவரையும் கைதுசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.