மாகாண மட்ட வணிக கண்காட்சியும், தொழில் சந்தையும் ‘சமதளத்தில் ஒன்றாக’ எனும் தொனிப் பொருளில் இன்று கிளிநொச்சியில் வடமாகாண முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த கண்காட்சி கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த கண்காட்சியில் மாற்றுதிறனாளிகளால் வடிவமைக்கப்பட்ட கைவினை பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், விற்பனையும் செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.
குறித்த நிகழ்வில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.