வடக்கில் பொது மக்களின் காணிகளை இராணுவத் தேவைகளுக்காக சுவீகரிப்பை எதிர்த்து தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் காணி சுவீகரிப்பிற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
இதற்காக அரசு சுவீகரிக்கவுள்ள காணிகளை மதிப்பீடு செய்யும் பணிகளை விலைமதிப்பீட்டுத் திணைக்களம் மேற்கொண்டுள்ளனதாக தெரியவருகின்றது.
இதிலும் உண்மையான பெறுமதிக்கு காணிகளை மதிப்பீடு செய்யாது அண்ணளவாகவே காணிகளின் விலைகள் மதிப்பீடு செய்யப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை காணி சுவீகரிப்பிற்கு என 400 மில்லியன் ரூபா ரூபாவையே அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்ட நிலையில் இத்தொகையானது ஒரு சிலருக்கும் நட்ட ஈடுகளை வழங்க முடியாத தொகையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இக்காணி அபகரிப்பிற்கு 5 ஆயிரம் வழக்குகளை தாக்கல் செய்ய தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரையில் 2 ,000 பேர் இதற்காக ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.