வடக்கில் புதிதாக நான்கு பூங்காக்களை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வனவிலங்கு பணிப்பாளர் நாயகம் டபிள்யு.எஸ்.கே.பத்திரண தெரிவித்துள்ளார்.
இதற்காக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் காணிகளை தெரிவுசெய்வதற்கான வர்த்தகமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக வனவிலங்கு பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
இன்று நாட்டில் 22 தேசிய பூங்காங்கள் இருக்கின்றன. புதிய இந்த நான்கு பூங்காக்களுடன் மொத்தமாக 26 பூங்காக்களை முன்னெடுப்பதற்கு தற்போதுள்ள 900 ஊழியர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. எனவே மேலும் 1500 பேரை இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை எதிர்பார்த்திருப்பதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளது.