வடக்கில் பல பகுதிகளில் சுகாதார நடவடிக்கை!

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் பல் பகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை பொலிஸ், இராணுவம் மற்றும் சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், நாட்டின் பல பகுதிகள் மற்றும் மக்கள் அதிகமாகக் கூடும் நகர்ப் பகுதிகளில் கிருமி நீக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பிரதேச சபையினால் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக இன்று புதுக்குடியிருப்புப் பிரதேச சபையின் ஏற்பாட்டில் தொற்று நீக்குகின்ற செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு நகரக் கடைத் தொகுதிகள், வங்கிகள், உடையார்கட்டு சந்தை, விசுவமடு சந்தை வளாகம், திருமுருகண்டி பிரதேசம், மாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இதில் பிரதேச சபையின் தவிசாளர் பிரேமகாந், பிரதேச சபையின் செயலாளர் கிருசாந்தன், பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, வவுனியா நகரசபை தலைவரின் உத்தரவுக்கமைய வவுனியா நகரம் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது. கொரோனா வைரஸ் நோயினை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா நகர சபை தவிசாளர் கெளதமனின் நேரடி வழிகாட்டலில் நகரை சுத்திகரிக்கும் செயற்பாடு இடம்பெறுகிறது.

இதற்கமைய இன்று வவுனியா நகரசபைக்கு உட்பட்ட பகுதிகள் நகரசபை சுத்திகரிப்புத் தொழிலாளர்களால் நகரை சுத்திகரிக்கும் செயற்பாடு இடம்பெறுகிறது.

Related Posts