வடக்கில் அவசியமற்று கூட்டம் கூடுவதை தடுக்க தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவித்தெள்ளது.
நேற்றயதினம் மாலை இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்த பல்வேறு கெடுபிடிகள் பொலிஸார் மற்றும் படையினரால் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் கோவிட் – 19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அவசியமற்ற ஒன்றுகூடல்களைத் தடுக்க முடியும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.