வடக்கில் தாதியர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

வடமாகாணத்தில் தாதியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கமைய உயர்தர பரீட்சையில் 3 பாடங்களில் சித்தியடைந்தவர்களும், சாதாரண தரப்பரீட்சையில் 6 பாடங்களில் சித்தியடைந்தவர்களும் தாதியர் சேவைக்கு விண்ணப்பிக்க முடியும் என அரச தாதியர்கள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் பாலசிங்கம் சிவயோகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

குறிப்பாக உயர்தரப் பரீட்சையில் உயிரியல் மற்றும் கணிதம் உட்பட 3 பாடங்களில் சித்தியடைந்தவர்களும், சாதாரண தரப்பரீட்சையில் தமிழ், கணிதம், ஆங்கிலம் மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட 6 பாடங்களில் சித்தியடைந்தவர்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க முடியும்.

குறிப்பாக 18 வயது முதல் 28 வயதுடையவர்கள் இந்த பயிற்சிக்கு விண்ணபிக்க முடியும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Related Posts