வடக்கில் தனி இராணுவ அலகை அமைப்பது சாத்தியமில்லை – பசில் ராஜபக்ஷ

pasil-rajapakshaமாகாண பொலிஸ் அதிகாரங்களின் அடிப்படையில் தனியான இராணுவ அலகுகளை உருவாக்க எவ்வித சாத்தியமும் கிடையாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ´தி ஹிந்து´ பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மாகாண இராணுவ அதிகாரங்களை வழங்குவதற்கு சந்தர்ப்பம் கிடையாது என 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் குறிப்பிட்டார்.

1988ம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எப். வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய இராணுவமொன்றை அமைக்க முயற்சித்ததாக பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கிற்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் மீளவும் இவ்வாறான ஓர் நிலைமை ஏற்படாது என்பதனை தின்னமாக குறிப்பிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாகவே மாகாணசபைகளுக்கு முழு அளவில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts