வடக்கில் செப்டெம்பரில் தேர்தல்!

mahinda_rajapaksaவடக்கு மாகாண சபைத் தேர்தல் இவ்வருடம்(2013) செப்டெம்பர் மாதம் நடாத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபைத் தேர்தலை நிறுத்தி வைக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்பதுடன், அதைச் செய்து விமர்சனங்களை எதிர்கொள்ள விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய எட்டு மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற்று நிறைவடைந்துள்ள நிலையில் செப்டெம்பர் மாதம் வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts