யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தமிழர்களின் வீடுகளை அழிக்கும் நடவடிக்கை இடம்பெறவில்லை என இராணுவப் பேச்சாளர் ருவான் வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
வலி.வடக்கில் உள்ள பொது மக்களின் வீடுகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனையடுத்து குறித்த விடயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஊடாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டது.
அதனையடுத்து வீடுகள் உடைப்பதனை நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்ட பின்னரும், அங்கு இராணுவத்தினரால் வீடுகள் உடைக்கப்பட்டு வருகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தி இருந்தது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட போதே இராணுவப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இராணுவத்தினர் சிங்கள குடியேற்றத்தை மேற்கொள்வதற்கான வீடமைப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாகவும், தமிழ் மக்களின் குடியிருப்புகளை அழித்து வருவதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டு வந்தன.
எனினும் இராணுவத்தினர் அவ்வாறான செயற்பாடுகள் எவற்றிலும் ஈடுபடவில்லை. இராணுவ முகாமின் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலேயே நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றது என்றார்.
இதேவேளை, குறித்த வீடழிப்பானது இராணுவத்தினரின் குடும்பங்களை குடியமர்த்துவதற்காகவே நடைபெற்று வருகின்றது என இராணுவ அதிகாரி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் நேரடியாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
வேறுவழியைத் தான் நாம் பார்க்க வேண்டும் – சம்பந்தன்
வலி.வடக்கில் மஹிந்தவின் பணிப்பையும் மீறி நேற்றும் வீடுகள் இடித்தழிப்பு!
வீடுகள் இடிப்பதை நிறுத்துமாறு ஜனாதிபதி படையினருக்கு உத்தரவு
இராணுவத்தின் அட்டகாசத்தால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவாய்ப்பில்லை – சரவணபவன்