கோவிட் -19 நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க வடக்கு மாகாணத்தில் சிறப்பு வைத்தியசாலையை அமைக்க இராணுவம் தயாராக உள்ளது என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
100 படுக்கைகளைக் கொண்டதாக இந்த சிறப்பு வைத்தியசாலையை தயார்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கோவிட் -19 நோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 700 பேரை அண்மித்துள்ள நிலையில் அரச வைத்தியசாலைகளுக்கு மேலாக இந்த சிறப்பு வைத்தியசாலையை வடமாகாணத்தில் அமைக்க இராணுவம் தயாராகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.