வடக்கில் கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு அதிகளவில் ஆசிரிய வெற்றிடம் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சீறிதரன் தெரிவித்துள்ளார்.
இதனால் மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். மாகாணம் முழுவதிலும் ஆசிரியர்களுக்கு பாரியளவில் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
ஆசிரிய பற்றாக்குறைக்கு உடனடித் தீர்வு வழங்கப்பட வேண்டும். பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலையை வினைத்திறனாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அதிகளவில் அசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவதன் மூலம், மாகாண ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு வழங்க முடியும் என சிறீதரன் தெரிவித்துள்ளார்.
வரவு செலுவுத் திட்ட விவாத்த்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.