எமது மக்களை அழிக்கும் நோக்குடனேயே கடன் வழங்கும் நிறுவனங்கள் எமது பிரதேசத்துக்குள் நுழைந்திருக்கின்றன அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் உடனடியாக வடக்கு மாகாணசபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சு. பசுபதிபிள்ளை தெரிவித்தார்.
நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி பொதுச் சந்தை திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்
அங்கு தொடர்ந்து உரையாற்றைய அவர் , ’யுத்தத்தினால் அனைத்தையும் இழந்து இருக்கின்ற கிளிநொச்சியில் லீசிங் நிறுவனங்கள் என்ற பெயரில் நுழைந்துள்ள கடன்வழங்கும் நிறுவனங்கள் மக்களுக்கு ஆசைவார்த்தை காட்டி கடன்களை வழங்கி கொள்ளை இலாபம் ஈட்டுகின்றனர்.
இதனால் எத்தனையே அப்பாவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் இவ்வாறான நிறுவனங்கள் எமது மக்களை அழிக்கின்றன இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு முதல்வரை கேட்டுக்கொள்கின்றேன்.’ என்றார்.