வடக்கில் கடந்த 6 நாட்களில் மாத்திரம் 75 கொரோனா மரணங்கள் பதிவு!

வடக்கு மாகாணத்தில் செப்டெம்பர் மாதத்தின் முதல் 6 நாட்களில் மாத்திரம் 75 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் வவுனியா மாவட்டத்தில் 29 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, வடக்கு மாகாணத்தில் நேற்று திங்கட்கிழமை 11 பேர் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பபாணம் மாவட்டத்தில் 5 பேரும் வவுனியா மாவட்டத்தில் 3 பேரும் முல்லைத்தீவில் 2 பேரும் கிளிநொச்சியில் ஒருவரும் என 11 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் 2020 மார்ச் தொடக்கம் நேற்றுவரை வடக்கு மாகாணத்தில் 488 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

Related Posts