வடக்கில் ஊரடங்குச் சட்டம் பிற்பகல் 2 மணிக்கே மீள நடைமுறைப்படுத்தப்படும்

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்கள் மற்றும் கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2 மணிக்கு மீள நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

முன்னர் நண்பகல் 12 மணிக்கு மீள நடைமுறைப்படுத்தப்படும் என தீர்மானிக்கப்பட்ட போதும் பிற்பகல் 2 மணிக்கே நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts