வடக்கில் உள்ள இராணுவ முகாம்களின் மீது யாரும் கல்லெறியவில்லை

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னராக காலப்பகுதி மிகவும் அமைதியானதாக இருக்கின்றது. வடக்கிலும் அவ்வாறானதொரு நிலைமையே காணப்படுகின்றது என்று தெரிவித்துள்ள இராணுவப்பேச்சாளர் ருவன் வணிகசூரிய,

ruwan-vanika-sooreyaa

வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் மீது கல்வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கில் எந்தவொரு இடத்திலேயேயும் விடுதலை புலிகளின் கொடி ஏற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வடக்கில் இராணுவ முகாம்கள் மீது கல்லெறியப்பட்டுள்ளது. புலிக்கொடி ஏற்றபட்டுள்ளது என்பதெல்லாம் கட்டுக்கதைகளாகும் அக்கதைகளை யாரும் நம்பவேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் அவ்வாறான எந்தவொரு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் கட்டுக்கதைகளை பரப்பிவிட்டு, நாட்டில் தற்போது நிலவுகின்ற சமாதானத்தை குழப்புவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.

கட்டுக்கதைகளை நம்பாமல் தற்போது நிலவுகின்ற சமாதானம் நீடிப்பதற்கு வழிசமைக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts