வடக்கில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு

வட மாகாணத்தில் உற்பத்தியாகும் தரமான உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றிற்கு சந்தைவாய்ப்பை பெற்றுக் கொடுத்து புலம்பெயர் மக்களின் தேவைகளை பூர்த்தியாக்கும் வகையில் ஏற்றுமதி செய்யவும், அவற்றுக்கான வசதிகளைப் பெற்றுக் கொடுக்கவும் யாழ் வணிகர் கழகம் முன்வந்துள்ளது.

இவ்வாறான பொருட்களின் தேவைகள் பற்றிய கேள்வி கோரல்கள் யாழ் வணிகர் கழகத்திற்கு ஏற்கெனவே கிடைத்துள்ளது.

இவ்வாறான அரிய வாய்ப்பை பயன்படுத்தும் வகையில் எமது மண்ணில் இவ்வாறான உள்ளுரில் உற்பத்தியாகும் தரமான உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்கள் பற்றி அனைத்து விபரங்களையும் உற்பத்தியாளர்கள் யாழ் வணிகர் கழகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ விரைவாக அனுப்பி வைக்க முடியும்.

இவ்வாறான பொருட்களை ஏற்கனவே உற்பத்தியாக்கி சந்தைவாய்ப்பை பெற்றுள்ளவர்களும் தங்கள் விபரங்களை எமக்கு அனுப்பி வைத்தால் மேலதிக சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

ஆகவே தங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் புகைப்படங்கள், தரம் மற்றும் விஷேட தன்மைகள் போன்ற விபரங்களையும் தங்களால் வழங்கக்கூடிய தொகை பற்றிய விபரங்களையும் எமக்கு விரைவாக சமர்ப்பித்தல் நன்று என யாழ் வணிகர் கழகத் தலைவர் ஜெயசேகரன் அறிவித்துள்ளார்.

யாழ் வணிகர் கழகம், 165, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியையோ அல்லது jaffnachamberofcommerce@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையோ உற்பத்தியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலதிக விபரங்கள் தேவைப்படின் 021 222 8593 இலக்க தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts