வடக்கில் இருப்பவை நாய்க்குட்டிகளல்ல புலிக்குட்டிகள் என்பது நிரூபணம்

சம்­பந்­த­னிடம் எப்­போதும் ஒரே கொள்­கையும் வெளிப்­ப­டை­யான செயற்­பா­டுமே உள்­ளது. ஆகவே சம்­பந்­தனை சந்­தே­கப்­ப­டாது நம்ப முடியும். ஆனால் ரணில் மிகப்­பெ­ரிய சூழ்ச்­சிக்­காரர்.

எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் ரணிலை நம்­ப­மு­டி­யாது என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­வித்தார். வடக்கில் இருப்­பவை நாய்க்­குட்­டிகள் அல்ல புலிக்­குட்­டிகள் என்­பதை மீண்டும் ஒரு­முறை கூட்­ட­மைப்­பினர் நிரூபித்து விட்­டனர் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று ஸ்ரீலங்கா சுதந்­தரக் கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்­டி­ருந்த போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

தேர்­தலின் பின்னர் வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாய­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான வாக்­கெ­டுப்­பினை நடத்த ஐக்­கிய நாடுகள் சபை தலை­யிட வேண்டும் என்ற கருத்­தினை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்கள் தெரி­வித்து வரு­கின்­றனர்.

யுத்­தத்­திற்கு பின்னர் வடக்கின் அர­சியல்வாதிகள் தமது பாதை­யினை மாற்­றி­யுள்­ளனர் என நாம் நினைத்­தாலும் இன்றும் அங்கு பிரி­வி­னை­வாத கொள்­கையே இயங்கி வரு­கின்­றது. வடக்கில் அர­சியல் செய்­பவை நாய்க்­குட்­டிகள் என்ற நினைப்பில் நாம் இருந்தோம். ஆனால் அங்கு இருப்­பவை நாய்க்­குட்­டிகள் அல்ல புலிக்­குட்­டிகள் என்­பதை மீண்டும் ஒரு­முறை கூட்­ட­மைப்­பினர் நிரூபித்து விட்­டனர்.

வடக்குஇ கிழக்கை இணைந்து தனி நாட்டை கோரிய புலி­களின் தலைவன் பிர­பா­க­ரனின் கொள்­கை­யி­லேயே இவர்கள் இன்றும் செயற்­பட்டு வரு­கின்­றனர். இலங்­கையில் இருந்து வடக்குஇகிழக்கை பிரிக்க சர்­வ­தே­சமும் பிரி­வி­னை­வாத அர­சி­யல்­வா­தி­க­ளுமே முயற்­சிக்­கின்­றனர். உலகில் பல நாடு­களில் இவ்­வா­றான சுய நிர்­ணய உரி­மைக்­கான போராட்டம் நடை­பெற்­றுள்­ளது.

ஸ்கொட்­லாந்து, கியுபெக், கனடா ஆகிய நாடுகள் சுய­நிர்­ணய உரி­மையை கோரி தம்மை தனி­நா­டாக மாற்றிக் கொண்­டன. ஆனால் அவ்­வாறு பிரிந்த நாடுகள் எல்லாம் தனித்த இராச்­சி­ய­மா­கவே காணப்­பட்­டன. ஆனால் இலங்­கையில் வடக்கும் கிழக்கும் அவ்­வா­றான இராச்­சி­யங்கள் அல்ல. இலங்கை போன்ற நாட்டில் அவ்­வா­றான தனித்த இராச்­சி­ய­மாக எந்த மாகா­ணத்­தையும் கருத முடி­யாது. அதேபோல் இலங்­கையின் பூகோள வர­லாற்றில் முன்பு எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் வடக்கும் கிழக்கும் தனித்து செயற்­பட்ட வர­லா­றுகள் இல்லை. ஆகவே வடக்­கையும் கிழக்­கையும் தனி நாடாக மாற்­றிக்­கொ­டுக்க வேண்­டிய எந்­த­வித தேவையும் இல்லை.

அதேபோல் அர­சியல்வாதி­களின் தேவைக்கும், சர்­வ­தேச தேவைக்கும் ஏற்ப செயற்­பட முடி­யாது. வடக்கு கிழக்கு மக்கள் தாம் தனித்து போக விரும்­பு­வ­தானால் மக்­களின் விருப்­பத்­துக்கு அமைய ஒரு வாக்­கெ­டுப்பை நடத்த வேண்டும். மாறாக சர்­வ­தேசம் தாம் விரும்பும் கார­ணத்­தினால் நாட்டை பிரிக்க இடம்­கொ­டுக்க முடி­யாது.

இவ்­வா­றான நிலையில் இம்­முறை பொதுத் தேர்­தலின் பின்னர் தவ­றி­யேனும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாட்டில் பிர­த­ம­ராக தெரி­வானால் இந்த நாட்டின் பூகோள வரை­படம் மாற்­றப்­படும். வடக்கு, கிழக்கு இல்­லாத இலங்­கை ­வரைப­டத்­தி­னையே இனிமேல் நாம் பார்க்­க­வேண்டி வரும். சிங்­கள, பெளத்த நாடான எமது இலங்­கையை எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் மாற்­றி­ய­மைக்க இந்த நாட்டு சிங்­கள மக்கள் இடம் வழங்கக் கூடாது. நாட்டை பிரிக்கும் எந்­த­வொரு வேலைத்­திட்­டத்­தையும் ஐக்­கிய தேசியக் கட்சி முன்­னெ­டுக்க மக்கள் அனு­ம­திக்கக் கூடாது.

கேள்வி :- ஒன்­றி­ணைந்த நாடு என்­பதை ஐக்­கிய தேசியக் கட்சி தெரி­வித்­துள்­ளதே. அப்­படி இருக்­கையில் நீங்கள் கூறு­வது எவ்­வாறு சாத்­தி­ய­மாகும்?

பதில் :- கடந்த 2001ஆம் ஆண்டு ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் ஒன்­றி­ணைந்த நாடு என்ற வாக்­கு­று­தியை கொடுத்தே ஆட்­சி­ய­மை­த்தனர். ஆனால் 2002ஆம் ஆண்டு விடு­தலைப் புலி­க­ளுடன் ஒஸ்லோ மாநாட்டில் சமஷ்டி உடன்­ப­டிக்­கையை செய்­து­கொள்­ள­வில்­லையா? ரணில் விக்­கி­ர­ம­சிங்க என்­பவர் மேற்­கு­தேச நாடு­க­ளிடம் மண்­டி­யிட்டு ஆட்சி நடத்தும் ஒரு நப­ராவார்.

Related Posts