வடக்கில் இன்று 576 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இதுவரை காலமும் இராணுவத்தின் கட்டுபாட்டில் இருந்த 576 ஏக்கர் பரப்பளவு கொண்ட மக்களின் காணிகள் இன்று திங்கள்கிழமை ஜனாதிபதியினால் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தில் இடம்பெற்ற உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் 2016-2018 இன் ஆரம்ப நிகழ்வின் போதே, மக்களுக்கு காணிகளும் வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சான் உள்ளிட்ட சில பிரதேசங்களில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 437 ஏக்கர் நிலமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 ஏக்கர் நிலமும் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts