வடக்கில் இடம்பெறுகின்ற வன்முறைகளுக்கு இராணுத்தினரே காரணமாக இருக்கிறார்கள் இது தேர்தல் காலம் என்பதால் இராணுவத்தின் இவ்வாறான செயற்பாடுகள் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெறுவதற்கு வழிசமைக்காது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் ஆணையாளரிடம் தெரிவித்துள்ளனர்.
யாழிற்கு விஐயம் செய்த தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தொடர்பில் வேட்பாளர்களின் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ் பொது நூலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச் சந்திரன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் நிலைமைகள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளருக்கு தெரியப்படுத்தியிருக்கின்றோம் தேர்தல் காலத்தில் செய்யவேண்டிய விடயங்கள் குறித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆணையாளருக்கு எடுத்துக் கூறியுள்ளது.
இரானுவம் இங்கு இருக்கின்ற வரையில் சிவில் நிலைமைகளை ஏற்படுத்த முடியாது இங்கு நடைபெறும் வன்முறைச் சம்பவங்களுக்கு இராணுவத்தினரே காரணம் என்று நாங்கள் தெரிவித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
வலி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதுடன் தற்காலிக அடையாள அட்டை வழங்கும் திகதியை கால நீடிப்புச் செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளளோம். அத்துடன் தீவுப்பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கு அப்பகுதி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்.
அத்துடன் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் போராட்டங்கள் நடத்த முடியாது என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்திருக்கின்ற நிலையில் யாழ் நகரில் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு போராட்டங்கள் நடாத்தலாமா? ஏன்று நாங்கள் கேள்வி எழுப்பிய கேள்விக்கு தேர்தல் ஆணையாளர் பதிலளிக்கவில்லை என்று சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.
இங்கு நடைபெறுகின்ற பிரச்சனைகளுக்கு பிரதான காரண கர்த்தவாக இராணுவம் உள்ளது இங்கிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டுமென தொடர்ச்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது இது தேர்தல் காலம் என்பதால் இராணுவத்தினர் இவ்வாறான செயற்பாடுகள் நீதியானதும் சுதந்தரமானதுமான தேர்தலாக நடத்த முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஐனாதிபதிக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் கடிதம் எழுதுமாறு தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச் சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி