வடக்கில் அமுலில் இருப்பது மஹிந்த ராஜ­ப­க்ஷ சிந்தனையா? மஹிந்த ஹத்து­ரு­சிங்­கவின் சிந்தனையா? – விக்­கி­னேஸ்­வரன்

vicknewaran-tnaவட மாகா­ணத்தில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் சிந்­த­னைகள் நடை­மு­றையில் இல்லை. இங்கு மஹிந்த ஹந்­து­ரு­சிங்­கவின் சிந்­த­னையே வழக்கில் இருக்­கின்­றது என்­பது தெளி­வாகத் தெரி­கின்­றது. இதி­லி­ருந்து இரா­ணு­வத்தை வரம்­பு­மீற இட­ம­ளித்தால் அர­சாங்­கத்­துக்கும் நாட்­டுக்கும் பாரிய விளை­வுகள் ஏற்­படும் என்று சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

யாழ்ப்­பாணம் கொக்­குவில் பாரதி சனசமூக நிலை­யத்தில் நேற்று நடை­பெற்ற பிர­சாரக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறி­யுள்ளார். இங்கு அவர் மேலும் தெரி­வித்­த­தாவது:

நான் சில நாட்­க­ளா­கவே இரா­ணுவம் வட­மா­காணத் தேர்தலில் தலை­யி­டு­கின்­றது என்று கூறி வந்தேன். அதற்கு ஒரு நல்ல உதா­ரணம் இன்று கிடைத்­துள்­ளது.

இன்­றைய ஞாயிறு தின­க­ரனில் செய்தி வாசித்தேன். அதில் கட்­டளைத் தள­பதி ஹத்­து­ரு­சிங்க மனோ க­ணே­ச­னையும் என்­னையும் பற்றி தின­கரன் வார மஞ்­ச­ரிக்கு அறிக்கை கொடுத்­துள்­ள­தாக கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்­பா­ணத்­திற்கு சுற்­றுலா வரு­ப­வர்கள் இரா­ணு­வத்தின் மீது வீண் பழி சுமத்­து­வதை வன்­மை­யாக அவர் கண்­டிப்­ப­தாக செய்தி வெளி­வந்­துள்­ளது.

அத்­துடன் நான் கொழும்பு அர­சியல் கண்­ணாடி மூலம் வடக்கைப் பார்ப்­ப­தா­கவும் எனது கருத்­துக்கள் என்­பது கடந்த கால உச்ச நீதி­மன்ற தீர்ப்­புக்கள் தொடர்பில் ஆச்­ச­ரி­யப்­பட வைக்­கின்­றது என்றும் கூறி­யுள்ளார்.

யார் இந்த ஹத்­து­ரு­சிங்க, அவர் அர­சாங்­கத்தின் சேவகர் கை கட்டி, வாய் புதைத்து ஏவல் புரியும் ஒரு அர­சாங்க சேவகர். அவ­ருக்கு என்ன உரித்­தி­ருக்­கி­றது,மனோ­க­ணே­ச­னையும் என்­னையும் விமர்­சிப்­ப­தற்கு. அவ­ருக்கு பாதிப்பு ஏற்­படும் விதத்தில் யாரா­வது சொன்னால் அவர் தமது மேலி­டத்­திற்கு சொல்லி அவர் வேலை செய்யும் திணைக்­க­ளத்­திற்குப் பொறுப்­பான அமைச்­சரே எங்­க­ளிடம் கேள்வி கேட்க வேண்டும்.

அரச சேவ­க­ரான அவ­ருக்கு அவரின் எஜ­மா­னரின் உரித்தை யார் வழங்­கி­னார்கள்? இப்­ப­டிப்­பட்ட வரம்பு மீறிய செயல்­க­ளி­னால்தான் வட இலங்கை தமிழ் மக்கள் இரா­ணு­வத்தை வெளி­யேறச் சொல்­கின்­றார்கள்.

மேலும் வட மாகாண சபைத் தேர்­தலில் அவரின் கைப்­பொம்­மைகள் நான்கு பேர் போட்­டி­யி­டா­விட்டால் அங்­க­ஜனைக் குறி­வைத்து எப்­படி அவர்­களால் தாக்க முடிந்­தது. அங்­க­ஜனும் அரச தரப்பு வேட்­பாளர். அப்­ப­டி­யி­ருந்தும் இரா­ணுவம் பக்க பல­மாக இருக்­கின்­றது என்ற மமதை அல்­லவா அவர்­களை அவ்­வாறு செய்­ய­வைத்­தது.

எனவே வட மாகா­ணத்தில் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் சிந்­த­னைகள் நடை­மு­றையில் இல்லை என்றும் மஹிந்த ஹத்­து­ரு­சிங்­கவின் சிந்­தனை வழக்கில் இருக்­கின்­றது என்­பது இதி­லி­ருந்து தெரி­கி­றது.

என்­ன­வாக இருந்­தாலும் மஹிந்த ராஜ­பக்ஷ எம் நாட்டின் ஜனா­தி­பதி அதுவும் முப்­ப­டை­க­ளி­னதும் அதிபர். அவரை மீறி அவரின் சேவகன் வாயைத் திறப்­பது முழு இலங்­கைக்கும் ஒரு இழுக்­கா­கப்­ப­டு­கின்­றது.

அவர் இனி­மேலும் பொது மக்­களை விமர்­சிப்­பதை நிறுத்­து­வா­ராக, ஆயுதம் ஏந்­தினால் எவ­ரையும் எதையும் தான் தோன்­றித்­த­ன­மாக குறை கூறலாம். எவ­ரையும் பயப்­ப­டுத்தி வைக்­கலாம் என்று இந்த அரச சேவகர் நினைக்­கக்­கூ­டாது.

இதி­லி­ருந்து நாங்கள் ஒரு பாடத்தைப் படிக்­கின்றோம். இரா­ணு­வ­மா­னது கட்­டுப்­பாட்­டுக்குள் வைக்­கப்­பட வேண்டும். வரம்பு மீற இட­ம­ளித்தல் ஆகாது. அவ்­வாறு வரம்பு மீறி விட்டால் அர­சாங்­கத்­திற்கும் நாட்­டுக்கும் பாரிய விளை­வு­களை அது ஏற்­ப­டுத்தும்.

இதை வலி­யு­றுத்திப் பேசு­வ­தற்­கா­கவே தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு உங்­க­ளிடம் 36 ஆச­னங்­களில் 30 ஆசன வெற்­றியைக் கேட்­கி­றது. உண்­மை­யான ஒரு விசா­ரணை நடை­பெற்றால் வட மாகா­ணத்தில் எந்த அள­வுக்கு இரா­ணுவம் மக்கள் இயல்பு வாழ்க்­கையை பாழ்­ப­டுத்தி வரு­கின்­றது என்­பது தெரிய வரும்.

18 ஆவது திருத்தச் சட்­டத்தின் பின்னர் முறை­யான ஒரு விசா­ர­ணையை எதிர்­பார்க்க முடி­யாத நிலையில் நாங்கள் வட­மா­கா­ணத்தில் இரா­ணுவம் ஆற்­றிய ஆற்­றிக்­கொண்­டி­ருக்கும் அட்­டூ­ழி­யங்கள் பற்றி சர்­வ­தேச விசா­ரணை ஒன்றைக் கேட்க வேண்­டி­யி­ருக்கும்.

அதற்குக் கூட எமக்குப் பலம் இருக்க வேண்டும். அத­னால்தான் நீங்கள் தரும் 2/3 பங்கு பெரும்­பான்மை வாக்­கு­களை விடவும். நாங்கள் பெரும்­பான்மை வாக்­கு­களைக் கேட்­கின்றோம். கிடைத்து விட்டால் என்ன நடக்குமோ என்ற நிலையில் தான் இராணுவத்தினர் பலவிதங்களில் அரச வெற்றிக்காகப் பாடுபடுகின்றனர்.

Related Posts