வடக்கில் அதிகளவான மக்களின் உடம்பில் ஓடுவது படைவீரர்களின் இரத்தமாகும் : ஆளுநர்

வடக்கில் அதிகளவான மக்களின் உடம்பில் ஓடுவது படைவீரர்களின் இரத்தமாகும் என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக நாட்டுக்காக இரத்தம் சிந்திய படைவீரர்கள் இன்று, வடக்கு மக்களை வாழ வைப்பதற்காக இரத்தத்தை தானமாக வழங்குகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் நடைபெற்ற படைவீரர் நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஓர் இனம், ஒர் மதம் அல்லது சமூகத்தின் வெற்றியாக இந்த நிகழ்வு நடைபெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts