தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமைக்கும் அதன் தலைவர் பிரபாகரன் சொல்லப்பட்டமைக்கும் பழிவாங்கும் நோக்கத்திலேயே சர்வதேச அமைப்புகள் எமது இராணுவம் மீது குற்றம் சுமத்தியுள்ளன. இராணுவம் மீதான யுத்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாததன் காரணத்தினாலேயே நாட்டில் இனக் கலவரங்களை தூண்டுகின்றனர்.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டாலும் பிரபாகரனுடன் தொடர்புடைய சர்வதேச அமைப்புகள் இன்றும் செயற்பட்டுக்கொண்டே இருக்கின்றது.
இலங்கையில் மீண்டுமொரு முறை பயங்கரவாதத்தை உருவாக்க இவ் அமைப்புகள் முயற்சித்துக்கொண்டே இருக்கின்றது.
வடக்கிலேயே இன்று அச்சுறுத்தலான சூழல் உள்ளது. சர்வதேச செயற்பாடுகளை கட்டுப்படுத்த வடக்கில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.