வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படாது. அவ்வாறு அகற்றும் நோக்கம் இல்லை’ என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.
இராணுவ முகாம்களுக்கு மேலதிகமாக உள்ள காணிகளே தற்போது விடுவிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் குறிப்பிட்டார்.