வடக்கிலும் சர்வதேச சுற்றுலா தினம்: முதலமைச்சர் அறிவிப்பு

சர்வதேச சுற்றுலா தின நிகழ்வு வடமாகாண சுற்றுலாத்துறை அமைச்சினால் எதிர்வரும் 25ஆம் திகதி யாழ்.மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வினை வடமாகாண முதலமைச்சரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இதன்போது, சுற்றுலாத்துறை தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. வடமாகாண சுற்றுலாதுறையை மேம்படுத்தும் நோக்கில் சர்வதேச சுற்றுலா தினம் வடமாகாணத்தில் இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம், வடமாகாணத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் அடையாளப்படுத்தப்பட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளதாகவும் வடமாகாண சுற்றுலா வழிகாட்டி கையேடும் வெளியீடு செய்யப்படும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Posts