வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்று! கண்டனப் பேரணி!

யாழ்ப்பாண மாவட்டம், வலிகாமம் வடக்கு மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இவர்கள் மல்லாகம் பழம்பெரும் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டமானது கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வலிகாமம் வடக்கில் தமது காணிகளை விட்டு இராணுவத்தினரை வெளியேறுமாறும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், வலிகாகமம் வடக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது காணிகள் விடுவிக்கப்படவேண்டுமெனவும், வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறவேண்டுமென்ற கோரிக்கை உட்பட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இப்போராட்டம் நடைபெற்றது.

Related Posts