வடக்கு மாகாணத்திலிருந்து இந்தியா சென்று பட்ட மேற்படிப்புக்கள், கற்கை நெறிகளைப் பூர்த்திசெய்தவர்களை பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது யாழ். இந்தியத் துணைத்தூதரகம்.
இதுகுறித்து தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:
வடமாகாணத்திலிருந்து சென்று இந்தியாவில் இந்திரவியல், கட்டடவியல், தொழில்நுட்பம், மருத்துவம், பாரம்பரிய கலைகள் உட்பட அனைத்து பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் கலாநிதிப் பட்டப்படிப்புகளை அல்லது குறுகிய காலப் பயிற்சி நெறிகளை தமது சுயநிதியிடல் மூலமாகவோ அல்லது இந்திய அரசின் புலமைப்பரிசில் மூலமாகவோ மேற்கொண்டவர்கள் தமது சுயவிவரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை தூதரக இணையத்தளத்திலிருந்து www.cgijaffna.org பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை cgi.jaffna@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது இந்தியத் துணைத்தூதரகம், இல.14, மருதடி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு தபால் மூலமாகவோ, அடுத்த மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.- என்றுள்ளது.