வடக்கிற்கான புகையிரதப் பாதைகள் நிர்மாணப்பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கையும் தெற்கையும் இணைக்கும் வடபகுதி புகையிரத பாதையின் நிர்மாணப் பணிகள் 185 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதற்கமைய இந்தப் பணிகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஓமந்தையிலிருந்து மாங்குளம் வரையில் முதல் கட்டப்பணியும், மாங்குளத்திலிருந்து பளை வரைஇரண்டாவது கட்ட பணியும், பளையிலிருந்து காங்கேசன்துறை வரை மூன்றாவது கட்ட பணிகளுமாக நிர்மாண பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகையிரத பாதை நிர்மாணப்பணிகள் அனைத்தும் இந்திய அரசின் உதவி திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகின்றது.
இந்தப் பணிகளை துரிதமாக பூர்த்தி செய்து காங்கேசன்துறை வரையில் விரைவாக புகையிரத சேவையை மேற்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் புகையிரத பாதையில் வளைவுகள் உள்ள பகுதிகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஓமந்தையிலிருந்து பளை வரை மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க முடியுமெனவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இப் பணிகள் 2014ஆம் ஆண்டு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரவிக்கப்படுகின்றது.