வடக்கிற்கு செப்டெம்பரில் யாழ்தேவி வருமாம்!

train-yarl-thevyயாழ்தேவி ரயிலின் வடக்கு பயணத்தை ஆரம்பித்து வைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்தேவி ரயிலை கிளிநொச்சி வரை பயணிக்க வைப்பதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளதென போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார்.

இது தொடர்பில் வடக்கு ரயில் வீதி புனரமைப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அதன்போது இரண்டு மாதங்களில் யாழ்தேவி ரயிலை கிளிநொச்சி வரை பயணிக்க வைப்பதென்றும் அடுத்த வருட முடிவுக்கு முன் யாழ்ப்பாணத்திற்கு பயணிக்க வைப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts