வடக்கிற்கு அனுப்பப்பட்ட சீனியில் 30,000 Kg திருப்பி அனுப்பப்பட்டது!

வட மாகாணத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 80,000 கிலோகிராம் சீனி அனுப்பப்பட்டிருந்த அதில் தரமற்றதாகக் கருதப்படும் 30,000 கிலோகிராம் சீனி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 320 ரூபாவிற்கு சீனி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வட மாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடற்தொழில் அமைச்சரிடம் உறுதியளித்திருந்தார்.

அத்துடன் கிடைக்கும் சீனியை கூட்டுறவு சங்கங்கள் மூலம் 280 ரூபாவிற்கு மக்களிற்கு வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில் சீனியின் தாராதரம் பார்வையிடப்பட்ட பின்னர் வடக்கிற்கு குறித்த நிறுவனத்தால் 80,000 கிலோ சீனி அனுப்பி வைக்கப்பட்டது.

அதில் தரமற்ற சீனியாக அடையாளம் காணப்பட்ட 30 ஆயிரம் கிலோகிராம் சீனி மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ”பொதுமக்களிற்கு தரமான பொருட்கள் மாத்திரமே வழங்கப்படும். கூட்டுறவு சங்கத்தினர் தரமற்ற சீனியை திருப்பி அனுப்பியது நல்ல விடயமாகும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Posts