வடக்கின் வறட்சிக்கு சீனா காரணமா? வலுக்கும் சந்தேகம்!

வடமாகாணத்தில் நிலவும் கொடுமையான வறட்சியினால் மக்கள் அன்றாட தேவைக்காக தண்ணீரைத் தேடி அலையும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கிணறுகள், நீர்நிலைகள், குளங்கள், ஆறுகள் வற்றி வெடித்த நிலமாக காட்சியளிப்பதுடன், கால்நடைகளும் ஏனைய விலங்குகளும் உயிரிழக்கின்றன.

Varache

மக்கள் நிலத்தினைத் தோண்டி கொஞ்சம் தண்ணீருக்காக பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டிய கொடுமையினை அனுபவிக்கின்றனர்.

கடந்த மாதங்களாக வறட்சி தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணமேயுள்ளன. ஆனால் அதற்குரிய காரணங்களை யாரும் ஆராய்ந்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வானத்தில் நிகழும் அசாதாரண நிகழ்வு தொடர்பில் அதனை அவதானித்த மக்கள் அது தொடர்பாக தங்களது கருத்துக்களைத் தெரிவிப்பதுடன், இந்த அசாதாரண நிகழ்வுதான் மழை பெய்யாமல் வறட்சி நிலவுவதற்கான காரணமாயிருக்குமோ என்ற சந்தேகத்தினையும் எழுப்பியுள்ளனர்.

அந்த நிகழ்வினை அவதானித்த ஒருவர் இவ்வாறு தனது கருத்தினைத் தெரிவித்தார்.

“கடந்த ஒரு மாதமாக கடுமையான மப்புடன் கூடிய காலநிலை தோன்றுகிறது. வானிலை அறிக்கை கூட மழை பெய்யும் எனக் கூறுகிறது.

சில வேளைகளில் சிறிய மழைத்துளிகள் கூட விழுகிறது. ஆனால் சற்று பின்பு மப்பு முழுமையாக கலைந்து வானம் வெளிக்கிறது.

ஒவ்வொரு முறையும் இந்நிகழ்வு நடைபெறும் பொழுது, வானில் கிபீர் அல்லது வேறு வகையான விமானத்தை காண்பதாக மக்களுக்குள் பேசிக்கொண்டனர்.

ஆரம்பத்தில் இதை நான் கேலியாகவே பார்த்தேன். ஆனால் பின்பு நானும் அதை உணர ஆரம்பித்தேன். ஒரே நாளில் காலையில் புகையுடன் சென்ற விமானத்தையும், மாலையில் கிபிர் தூரத்தில் செல்லும் சத்தத்தையும் உணர கூடியதாக இருந்தது” என்றார்.

விமானங்களில் பாவிக்கப்படும் பெற்றோல் உயர் தரத்தினைக் கொண்டதாக உள்ளதுடன், அவற்றில் புகை வெளிவருவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை என்பது அநேகமாநோருக்கு தெரிந்த விடயம்.

இவ்வாறு இருக்கும் நிலையில், வானத்தில் பெய்யக் கூடிய மழையினை யார் குழப்புகின்றனர்? அவ்வாறு குழப்ப வேண்டியதன் காரணமென்ன என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழும்புகிறது.

தற்போது இலங்கையில் சீனாவில் இராஜ்யம் மேலோங்கி வருவதுடன், வீதி புனரமைப்புப் பணிகளில் சீன நிறுவனங்களே ஈடுபட்டுள்ளன. வடக்கில் தற்போது மும்முரமாக வீதி அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

எனவே மழை பெய்வதால் சீன நிறுவனங்களின் குறித்த பணிகள் தடைப்படக் கூடும். அதனால் வடக்கில் சீனா இவ்வாறான உத்திகளைக் கையாண்டு மழையினைத் தடை செய்யக் கூடிய வாய்ப்புக்களும் இருக்கக் கூடும் என பலர் சந்தேகங்களை எழுப்புகின்றனர்.

உலகில் தொழில் நுட்பம் பல்வெறு துறைகளில் வளச்சி கண்டுவிட்டது. தொழில் நுட்பத்தின் மூலம் செயற்கை முறையிலான மழையினை பெய்ய வைக்க முடியுமென்றால், ஏன் மழையினைத் தடை செய்ய முடியாது?

அதுமட்டுமின்றி, மற்றுமொரு சந்தேகத்தினையும் மக்கள் எழுப்புகின்றனர்.

வடக்கில் வறட்சியின் கொடுமையும், கொழும்பு போன்ற சில மாவட்டங்களில் திடீரென்று கரு மேகங்கள் திரண்டு மழை பெய்வதாகவும் கூறுகின்றனர்.

இந்த இரண்டு சந்தர்ப்பங்களையும் உற்று நோக்கும் போது, ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டுமென தோன்றுகிறது.

இது தொடர்பாக சூழலியலாளர்களும், ஆய்வாளர்களும் சற்று ஆழமாக சிந்தித்து ஆய்வுகளை மேற்கொண்டால் உண்மையான காரணத்தினை விளங்கிக் கொள்ள முடியும்.

Related Posts