வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் நெடுந்தீவில் 11 ஆலயங்கள் புனரமைப்பு

NallurTemple05வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் நெடுந்தீவில் உள்ள 11 ஆலயங்கள் புனரமைப்புச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நெடுந்தீவு பிரதேச செயலர் ஆழ்வார்ப்பிள்ளை ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் நெடுந்தீவில் உள்ள எட்டு கிறிஸ்தவ ஆலயங்களும் மூன்று இந்து ஆலயங்களும் புனரமைக்கப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்த புனரமைப்பு பணிக்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 5.5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு ஆலயங்களுக்கும் தலா 505,000 ரூபா வீதம் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை வடக்கின் வசந்தம் ஊடாக நெடுந்தீவு பிரதேசத்தில் பொது விளையாட்டு மைதானம் அமைக்கப்படவுள்ளதாகவும் இதற்கென 7.5 மில்லியன் ரூபாவினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts