வடக்கின் முதலாவது பயிர் மருத்துவ முகாம்

விவசாயிகள் பயிர்களில் ஏற்படும் நோய்களை அடையாளம் காணவும், அவற்றைக் குணப்படுத்துவதற்கான பரிந்துரைகளைப் பெறவுமென வடமாகாணத்தில் முதற் தடவையாகப் பயிர் மருத்துவமுகாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதலாவது முகாம் கடந்த செவ்வாய்க்கிழமை (15.10.2013) புத்தூர் நிலாவரையில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், யாழ் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் ஆகியோரும், பூச்சியியல், மண்ணியியல் போன்ற விவசாயத் துறைகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது பெருமளவான விவசாயிகள் நோய்வாய்ப்பட்ட பயிர்களின் மாதிரிகளோடும் தோட்ட மண்மாதிரிகளோடும் வருகைதந்து நோய்களுக்கான காரணிகளை அடையாளங்கண்டு அவற்றைக் குணப்படுத்துவதற்கான ஆலோசனைகளைப் பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது. இப்பயிர் மருத்துவமுகாம் வடமாகாணத்தின் ஏனைய இடங்களிலும்; நிரந்தரமாகக் குறிப்பிட்ட காலஇடைவெளிகளில் நடாத்துவதற்கு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதென மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

IMG_9805 copy

IMG_9824 copy

IMG_9732 copy

Related Posts