வடக்கின் போர் 9 ஆம் திகதி ஆரம்பம்

வடக்கின் போர்’ என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 111 ஆவது வருடாந்த கிறிக்கற் போட்டியானது இம் மாதம் ஒன்பதாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.


வடக்கின் போர் எனப்படும் யாழ்ப்பாணத்தின் பழமையான இரு பாடசாலைகளுக்கு இடையிலான கிறிக்கற் போட்டியானது 1904ஆம் ஆண்டு முதன் முதலில் நடைபெற்றது.

அன்றிலிருந்து தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த போட்டியானது சில ஆண்டுகளில் தவிர்க முடியாத காரணங்களினால் இடைநிறுத்தப்பட்டு பின்னர் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றது.



இவ்வாறான நிலையில் 111 ஆவது வருடாந்த கிறிக்கற் போட்டி க இந்த வருடமும் இடம்பெறவுள்ளது.

இதன்படி 9 ஆம் திகதி முதல் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக போட்டியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடாத்துவதற்கு இரு பாடசாலை அதிபர்களும் தீர்மானித்துள்ளனர்.

இரு பாடசாலை அணிகளுக்குமிடையில் கிறிக்கற் போட்டியானது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து சென்ஜோன்ஸ் கல்லூரி 35 போட்டிகளிலும் யாழ்.மத்திய கல்லூரி 27 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இவற்றைவிட 40 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்ததுடன் 1 போட்டி இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ள ‘வடக்கின் போர்’ கிறிக்கற் போட்டியின் போது பாடசாலைக்கு அருகில் மதுபானங்கள் விற்பனை செய்வது மதுபானம் அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts