யாழ்ப்பாணம் மத்தியகல்லூரிக்கும் பரியோவான் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்று வருகின்ற வடக்கின் மாபெரும் துடுப்பாட்டப்போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட நேர நிறைவின்போது யாழ்.மத்திய கல்லூரி அணியினர் 7 விக்கெட்டுக்களினை இழந்து 126 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டனர்.இரண்டாவது நாள் ஆட்டத்தினை தொடர்ந்தமத்திய கல்லூரி அணியினர் துடுப்பாட்டத்தில் சௌமிதரன் யூலிய ஸ்கனிஸ்ரன் ஆகியோரின் இணைப்பாட்டத்தின் மூலம் நான்கு விக்கெட்டுக்களிற்க 40 ஓட்டத்தினை பெற்ற மத்திய கல்லூரி அணி சரிவிலிருந்து மீண்டது.
5 ஆவது விக்கெட்டுக்காக சௌமிதரன் யூலிய ஸ்கனிஸ்டன் சிறப்பான இணைப்பாட்டத்தினை பெற்ற போது யூலியஸ் கனிஸ்ரன் 23 ஓட்டங்களுடனும் சௌமிதரன் 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
ஆட்ட நேர முடிவில் அனன்ராஜ் 18 ஓட்டங்களுடனும் நிரோஜன் 12 ஒட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்திலுள்ளனர்.
பந்து வீச்சில் சென்ஜோன்ஸ் கல்லூரி அணி சார்பாக லோகதீஸ்வலன்35 ஓவர்கள் பந்து வீசி 40 ஓட்டங்களினை கொடுத்து 4 விக்கெட்டுக்களினையும் கனாமிருதன் 19 ஓவர்கள் பந்து வீசி 22 ஓட்டங்களினை கொடுத்து 2 விக்கெட்டுக்களினையும் நிலோசன் 9 ஓவர் பந்து வீசி 21 ஓட்டங்களினை கொடுத்து 1 விக்கெட்டினையும் பெற்றக்கொண்டனர்.
இப்போட்டியில் பெருந்திரளான ரசிகர்கள் கூடியிருந்த வேளை மழை இரண்டு தடவைகள் குறுக்கிட்டதால் போட்டியானது சில மணி நேரம் தடைப்பட்டது.இதன்படி இன்றைய போட்டியில் 12 ஓவர்கள் குறைக்கபட்டு 78 ஓவர்கள் பந்வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது