வடக்கின் போரில் சென்.ஜோன்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

யாழ். மத்திய கல்லூரி மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கிடையில் நடைபெற்ற 108 வது வடக்கின் பெருஞ் சமர் முடிவின்றி கைவிடப்பட்டிருந்த நிலையில் சென்.ஜோன்ஸ் அணி வெற்றி பெற்றதாக நேற்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.

stjhons-big-match

இரு கல்லூரி அதிபர்கள் தலைமையில் நேற்று நடைபெற்ற சந்திப்பிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

108ஆவது வடக்கின் பெருஞ் சமர் இம்முறை யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு 135 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

வெற்றி இலக்கை நோக்கி இரண்டாம் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் அணியின் மூன்றாவது விக்கெட் வீழ்த்தப்பட்ட போது வழங்கப்பட்ட ஆட்டமிழப்பில் நடுவரின் தீர்ப்பு தவறு என ரசிகர்கள் நினைத்தால் இந்த அமைதியின்மை உருவானது.

இந்த நிலையில் வெற்றி தோல்வி அறிவிக்கப்படாது போட்டி இடைநடுவில் கைவிடப்பட்டது. இதை தொடர்ந்து இரு கல்லூரி அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் போட்டி தொடர்பான சந்திப்பு இரு கல்லூரி அதிபர்களின் தலைமையில் நேற்று இடம்பெற்றபோதே கைவிடப்பட்ட 108 ஆவது பெருஞ்சமரில் சென். ஜோன்ஸ் அணி வெற்றி பெற்றதாக தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts