வடக்கில் அமைக்கப்படவிருந்த பொளாதார மத்திய நிலையம் தொடர்பில் நிலவிவந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள சூழலில் அதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவைக் குழுவின் பிரேரணைகளுக்கு அமைய விசேட பொருளாதார நிலையம் ஒன்றுக்கு பதிலாக விசேட பொருளாதார நிலையங்கள் இரண்டை அமைக்க முடிவுசெய்யப்பட்டது.
இதில் ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாங்குளத்திலும், மற்றையது வவுனியா மாவட்டத்திலுள்ள மதகுவைத்த குளத்திலும் அமைப்பதற்கு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிசன் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பில் முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.