‘வடக்கின் பெரும் போர்’- சம்பியனானது யாழ் மத்திய கல்லூரி அணி

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிக்குமிடையில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டித்தொடரில் யாழ் மத்தியகல்லூரி வெற்றிபெற்று சம்பியனானது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை காலை ஆரம்பமான வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் இரு கல்லூரிகளுக்கும் இடையிலால் இடம்பெறும் 112 ஆவது கிரிக்கெட் போட்டியாகும்.

எஸ்.தசோபன் தலைமையில் யாழ் மத்திய கல்லூரி அணியினரும் வி.ஜதுசன் தலைமையில் நடப்பு சம்பியன் சென்.ஜோன்ஸ் கல்லூரியினரும் பலப்பரீட்சையில் ஈடுபட்டனர்.

கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ் மத்திய கல்லூரி அணி தலைவர் எஸ்.தசோபன் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 217 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் பதிலெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 328 ஓட்டங்களைக் குவித்தது.

இதன்மூலம் யாழ். மத்திய கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் 111 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி தனது இண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையுமிழந்து 219 ஓட்டங்களைப் பெற, 109 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்று ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்று சம்பியனானது.

இதேவேளை, போட்டி நிறைவடைவதற்கு 2 ஓவர்கள் இருந்த நிலையிலேயே யாழ்.மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்றமை விசேட அம்சமாகும்.

Related Posts